அரைப்படி நெல் அதிகமாக கேட்ட தொழிலாளர்கள்! 44 பேர் எரித்து கொல்லப்பட்ட கீழ்வெண்மணி கொடூர சம்பவம்!

Default Image
  • தஞ்சையில் விவசாய தொழிலார்கள் கூலியான நெல் அளவை உயர்த்தி கேட்டதால் எரித்துக்கொள்ளப்பட்ட கொடூரம் அரங்கேறி 51 வருடம் ஆகிவிட்டது. 
  • தொழிலாளிகள் அப்போது வாங்கும் நெல் அளவை விட அரைப்படி நெல் அதிகமாக கேட்டதற்காக 44 பேர் எரித்து கொல்லப்பட்டனர்.

1968ஆம் ஆண்டு தமிழக நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை மற்ற இடங்களை போல பெரும்பாலும் நிலச்சுவான்தாரர்கள் நிலத்தை நிர்வகித்து வந்தனர்.  அவர்களிடம் கீழ்வெண்மணி விவசாய தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலைபார்த்ததற்கு நெல்லை கூலியாக வாங்குவது வழக்கம்.

அப்போது வேலை பார்த்ததற்கு கூலியாக தரும் நெல் போதவில்லை என கூறி, ஆதலால் அரைப்படி நெல் அதிகமாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் கோபமடைந்த இரக்கமற்ற அந்த நிலச்சுவான்தார். கூலி உயர்வு கேட்ட அந்த தொழிலாளிகளை கீழ வெண்மணிக்கு சென்று தங்கள் அடியாட்கள் மூலம் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அலறியடித்துக்கொண்டு தெருவின் ஓரத்தில் ஒரு குடிசை வீட்டிற்க்குள் 48 பேர் புகுந்தனர். அந்த குடிசைக்குள் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட அனைவரையும் பூட்டி வைத்து தீ வைக்கபட்டது. இதில் 44 பேரை நீக்கி இரையாக்கினார். இந்த சம்பவத்தில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்