கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாதத்தில் முடிக்கப்படும் -தெற்கு ரயில்வே!
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வண்டலூா் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர்.
தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்படவுள்ள ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது.
மாநில அரசுடன் ரயில்வே இணைந்து கிளாம்பாக்கம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ரயில் நிலைய பணிகள் தொடங்க தாமதமாகும் என்பதால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமே (CMDA) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரியாதையான வார்த்தையை பயன்படுத்துங்கள்.. போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள்…!
மேலும், இந்த விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானம் தொடங்கும் எனவும், வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.