கீழக்கரை ஜல்லிக்கட்டு – இன்று முன்பதிவு தொடக்கம்.!

jallikattu stadium

மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.

இந்த நிலையில், தமிழக அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதி கீழக்கரையில், ரூ.44 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

திறப்பு விழாவை முன்னிட்டு, ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஜனவரி 28 வரையில் 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது, இதற்கான முன்பதிவு விவரங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…. திமுக சார்பில் தேர்தல் பணி குழு அறிவிப்பு!

அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி madurai.nic.in என்ற தளத்தில், இன்று (ஜனவரி 19) நண்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் (ஜனவரி 20) நண்பகல் 12 மணி வரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில், ஜல்லிக்கட்டு காளைகள் உடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனை கொண்டே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்