உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரஞானந்தா அமெரிக்காவின் பேபியோனா கருணாவுடன் மோதினார். இந்த நிலையில், முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் 78-வது காய் நகர்தலில் டிரா செய்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா 47-வது காய் நகர்தலுக்கு பின் இந்த ஆட்டமும் டிரா ஆனது. இந்த நிலையில் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார். இதில், கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு இந்திய வீரர் முன்னேறியுள்ளார்.
இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கும் பிரஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில், ‘உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்; இறுதிப்போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ளவும் எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…