திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிய ஆர்வமாக உள்ளன – முதலமைச்சர் ஸ்டாலின்

Default Image

திராவிட மாடல் ஆட்சியை தங்கள் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த துடிப்புடன் உள்ளன என முதல்வர் உரை.

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் இணைந்து 3-வது சர்வதேச மனிதநேய சமூக நீதி மாநாட்டை நேற்று கனடாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திராவிடர் கழக தலைவர் வீரமணி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்பின் இம்மாநாட்டில் கலந்துகொண்டு காணொளி வாயிலாக உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகில் பல நாடுகள் கொண்டாடினர். இதுபோன்ற மாநாடுகள் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூக நீதி கருத்தியலே மனித நேயத்தின் அடிப்படையி்லதான் உருவாகியுள்ளது. தமிழகத்தில் பிறந்து தமிழில் திருக்குறளை தீட்டியிருந்தாலும், வள்ளுவரின் குறள்கள் உலகில் 125 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் பிறந்து தமிழில் பரப்புரை செய்தாலும் உலக சிந்தனையாளராக போற்றப்படுகிறார் பெரியார். அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்த முதலமைச்சர், பெரியார் சிந்தனைகள், தமிழ்மொழி அறிவு உள்ளிட்டவை குறித்தும் பேசினார். மேலும், பிற மாநில அரசுகள் தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிய ஆர்வமாக உள்ளன. தங்கள் மாநிலத்திலும் அவற்றை நடைமுறைப்படுத்த துடிப்புடன் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்