நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை , திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள தொல்லியல் சிறப்புமிக்க இடங்களில் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அகழாய்வு மேற்கொள்ள பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.
AI, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!
தேசிய கடல் சார் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நிறுவனங்களுடன் இணைந்து கொற்கை மற்றும் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளில் 65 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்கட ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும், கீழடியில் திறந்தவெளி அரங்கு அமைக்க 17 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…