கீழடியில் ரூ.17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம்..!

Keeladi

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழ்நாட்டில்  கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்  பொற்பனைக்கோட்டை ,  திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில்  அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.

மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள தொல்லியல் சிறப்புமிக்க இடங்களில் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும்.  இந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  இதன் மூலம் நாட்டிலேயே அகழாய்வு மேற்கொள்ள பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.

AI, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!

தேசிய கடல் சார்  தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நிறுவனங்களுடன் இணைந்து கொற்கை மற்றும் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளில் 65 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்கட ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும்,  கீழடியில் திறந்தவெளி அரங்கு அமைக்க 17 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்