கீழடியில் 6 -ம் கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பர் 15- ம் தேதிக்குள் முடிவுபெறவுள்ள நிலையில், பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6- ம் கட்ட அகழாய்வு, 40 லட்ச ருபாய் செலவில் கடந்த பிப். 19- ம் தேதி தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 24 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த 6- ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், எடைக்கற்கள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், மனித எலும்புக்கூடுகள், சங்குகள், கரிம படிமங்கள், பானைகள் என மொத்தம் மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள், செப்டம்பர் 15- ம் தேதிக்குள் முடிவடையவுள்ள நிலையில், கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணியை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். அந்த குழி அமைந்துள்ள இடங்கள், கண்டெடுத்த பொருட்கள் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தற்பொழுது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…