யாரும் செய்யாததையா..? கே.டி.ராகவன் செய்துவிட்டார். உலகில் எங்குமே நடக்காத ஒன்றை அவர் செய்துவிட்டார் என சீமான் கேள்வி எழுப்பினார்.
பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிராக பாலியல் தொடர்பான வீடியோசமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த விவகாரம் சமூக குப்பை என்றும் யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்? அறைக்குள் நடந்த தனிப்பட்ட விஷயத்தை பதிவு செய்வது சமூக குற்றம். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும்.
சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்துள்ளனர். அதையெல்லாம்தான் தவறு. அதை விட்டுவிட்டு, அவர் தனது அறையில் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது கேடுகெட்ட சமுகம் ஆகிவிட்டதோ..? என தெரிவித்தார். விவாதமே இல்லாமல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட விஷயங்களை தான் பேச வேண்டுமே தவிர கே.டி ராகவன் குறித்து பேசுவதெல்லாம் காலக்கொடுமை என கூறினார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…