தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல் கர்நாடகா ஏமாற்றியுள்ளது’ என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில், டெல்லியில் நேற்று கூடியது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்பட நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகம் தரப்பில் கூறியதாவது, நடப்பு ஆண்டுக்கான நீர் ஒதுக்கீட்டில், கர்நாடக அரசு, 14 டி.எம்.சி.,க்கு மேல் நிலுவை வைத்துள்ளது. இதை விரைந்து வழங்க வேண்டும். கர்நாடக அணைகள் மழையால் நிரம்பிய போது, அதிலிருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது. இந்த நீர் தான், தமிழகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. உபரி நீரை தந்து, கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில், சம்பா நெல் சாகுபடி துவங்கி உள்ளது. எனவே, அதற்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. எனவே, இனிவரும் மாதங்களுக்கான ஒதுக்கீட்டு நீரை, நிலுவையின்றி வழங்க வேண்டும்.இவ்வாறு, தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக, கர்நாடக அணைகளுக்கு எவ்வளவு நீர் கிடைத்தது; அதில் எவ்வளவு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…