#Breaking:காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றம் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்…!
கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடை திருவள்ளுவர் படத்தை அகற்றி,வேறு படம் பொருத்தப்பட்டு இருப்பதாக,வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது,காவி உடையில் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இந்நிகழ்வு தற்போது சர்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து,காவி உடையில் பொருத்தப்பட்ட திருவள்ளுவர் படத்தை நீக்கி,தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படைத்தை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும்,இவ்வாறு செய்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில்,காவி உடை திருவள்ளுவர் படத்தை அகற்றி,மீண்டும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்:”கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017-18 ஆம் ஆண்டு அடிமை அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து பேசி இப்போது அந்த புகைப்படத்தை அகற்றிவிட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அய்யன் திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது”,என்று தெரிவித்துள்ளார்.
கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017-18 ஆம் ஆண்டு அடிமை அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. @mkstalin @GunasekaranMu @sunnewstamil @savukku (1/2) pic.twitter.com/R6liw4KF5s
— MRK. Panneerselvam (@MRKPaneerselvam) June 17, 2021