கல்லணையில் இருந்து பாசனத்திற்க்காக காவேரி நீர் திறப்பு!
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கேரளா கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, சென்ற 13ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நீர் நேற்று திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அதன் பிறகு, அங்கிருந்து நேற்று இரவு 2 மணிக்கு கல்லணைக்கு வந்து சேர்ந்தது. கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் பாசனத்திற்க்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரால் டெல்டா மாவட்டத்திலுள்ள 10.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், பாண்டிச்சேரி வரை உள்ள விவசாய நிலங்களுக்கு பயனளிக்கும். என கூறப்படுகிறது.