செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது.! அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனை அறிவிப்பு.!
செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என அறுவை சிகிச்சைக்கு பின் காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை 5.15க்கு இதய ரத்த நாளங்கள் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது.
சுமார் 5 மணிநேரம் கடந்த இந்த இதய அறுவை சிகிச்சையானது தற்போது முடிந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்தும் காவேரி மருத்துவமனை செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 4 இதய ரத்த நாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையினை செய்துள்ளனர். தற்போது அவர் மூத்த இதய சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.