விபத்து எதிரொலி – ரயில் சேவைகள் மாற்றியமைப்பு.! முழு விவரம் இதோ…
கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக சில ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா சென்ற விரைவு ரயில் மோதியதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன, மேலும் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசகமாகியது.
விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது, விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக சில ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12663 ஹவுரா- திருச்சி ரயில் எழும்பூர் வராமல் ரேனிகுண்டா, காஞ்சிபுரம், விழுப்புரம் வழியே செல்லும்.
22663 எழும்பூர்- ஜோத்பூர் ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழியே செல்லும். 22606 நெல்லை- புரூலியா ரயில் அரக்கோணம் வராமல் மேல்பாக்கம், ரேனிகுண்டா வழியே இயக்கப்படுகிறது.
12603 சென்னை- ஐதராபாத் ரயில் சூலூர்பேட்டை வராமல் அரக்கோணம், ரேனிகுண்டா வழியே செல்லும். 12511 கோரக்பூர்- கொச்சுவேலி ரயில் சென்னை வராமல் ரேனிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ரயில்கள் ரத்து
இதற்கிடையில், கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பதி- புதுவை (16111), சென்னை- திருப்பதி (16203), சென்னை – திருப்பதி (16053) 2 மார்க்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சென்னை- திருப்பதி (16057), அரக்கோணம்- புதுவை (16401), கடப்பா- அரக்கோணம் (16402), அரக்கோணம் – திருப்பதி (06754), விஜயவாடா- சென்னை (12711), சூலூர்பேட்டை- நெல்லூர் (06745) ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.