கோவையில் மின்னல் வேட்டை.! இரண்டே நாளில் 88 ரவுடிகள்.! 9 பேர் அதிரடி கைது.!
கோவை மாவட்டத்தில் ரவுடிகள் செயல்பாட்டை கட்டுப்படுத்த ஆபரேசன் மின்னல் வேட்டை எனும் பெயரில் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் மாவட்டம் முழுவதும் ரவுடிகளின் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொடுத்த உத்தரவின் பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட ‘மின்னல் வேட்டை’ எனும் அதிரடி நடவடிக்கையின் கீழ் 88 ரவுடிகளின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதில் 9 ரவுடிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களிடம் இருந்து நன்னடத்தை பிணயம் என்பது எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மீதம் 17 ரவுடிகளின் மீது அடுத்ததாக பிடியாணை நிறைவேற்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மின்னல் வேட்டையானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரவுடீசத்தில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும், இந்த வேட்டை தொடரும் எனவும் காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.