கருணாஸ் மீண்டும் போலீசார் மீது குற்றசாட்டு…..!!!
சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் தான் இருப்பதாக நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தவறான தகவலை பரப்புவதாக கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக முதல்வர், காவல்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக நுங்கம்பாக்கம் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.