அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்..!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார்கள் என்று ஆளுநர் அறிவித்துள்ளார். துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன் ஆசிரியர் பணியில் 36 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் கதிரேசன் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் ஆர்.எம் கதிரேசன் இருந்துள்ளார்.