“கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை”- கமலஹாசன்
கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லையென நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன், “ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், 18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், வாக்காளர் என்ற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை என பேசினார்.
மேலும் பேசிய அவர், கடமையை சரிவர செய்யாதவர்கள் சமூகத்தில் தன்னுடைய உரிமைகளை இழப்பார்கள். அதனை மாற்றம் வேண்டும். சிஸ்டம் சரி இல்லை, எல்லாரும் திருட்டு பயல்கள் என மறைமுகமாக விமர்சித்த அவர், கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனவும், நாம் அனைவர்க்கும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் அடையாளம், வாக்காளர் அடையாள அட்டை என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, நவம்பர் 21, 22 தேதி அல்லது டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வீட்டிற்கு அருகில் இருக்கும் வாக்குச்சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் திர்வு பெறுங்கள் என தெரிவித்துள்ளார்.
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்#iWillCHANGE_iWillVOTE#என்ஓட்டு_என்பெருமை pic.twitter.com/xvggdOfl6V
— Kamal Haasan (@ikamalhaasan) November 20, 2020