சுதந்திர இந்தியாவிற்கு இப்போதுதான் விடியல் பிறந்துள்ளது! நடிகர் தனுஷின் தந்தை புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி, சென்ற செப்டம்பர் 17ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் கோயம்பத்தூரில் தமிழக பாஜக கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் தனியார் கல்லூரியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா மற்றும் நடிகர் தனஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன். அது என் அடையாளம். வெளிநாடு சென்றுவரும் பிரதமர் மோடிக்கு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்றோருக்கு கொடுக்கப்பட்ட உற்ச்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளிநாடுகளில் சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
எந்த விவகாரத்திலும் இந்தியாவை அசைக்க முடியாது. சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் தற்போதுதான் இந்தியாவிற்கு விடியல் பிறந்துள்ளது.’ என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025