“இளையராஜாவாக இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது., காரணம் இதுதான்” கஸ்தூரி பேட்டி
கோயில் கருவறைக்குள் அர்ச்சர்கர்களை தவிர வேறு சாதியினர் யாரும் போக முடியாது. அது இளையராஜாவாக இருந்தாலும் இதுதான் மரபு என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.
சென்னை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அர்த்த மண்டபத்தின் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி பேசுபொருளாக மாறியது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் ஒன்றையும் அளித்து இருந்தது. அதில், அர்த்த மண்டபத்த்தில் அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்று விளக்கம் அளித்து இருந்தது. இச்சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ” இளையராஜா அவர்களை பற்றிய சர்ச்சை தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. அவர் ஒரு இசை கடவுள் அவர் கோவிலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. அவரை கோயிலுக்குள் விட மறுத்தார்கள் என சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன் . இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்பி இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் மக்களை ஏமாற்ற போகிறார்கள்?
கருவறைக்குள் எந்த சாதியை சேர்ந்தவர்களும் போக முடியாது. அது இளையராஜா சாராக இருந்தாலும் சரி, கஸ்தூரியாக இருந்தாலும் சரி என்கூட இருக்கும் சகோதரர்கள், பிராமணர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்கள் கருவறைக்குள் போக முடியாது.
அர்ச்சகர்கள் மட்டுமே போக முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். அப்படியென்றால், அர்ச்சகர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியும். இதுதான் நிதர்சனம். இதனை திரித்து வன்மமாக பேசுவதை நான் கண்டிக்கிறேன். இதனை தான் நவம்பர் 3ஆம் தேதி பேசினேன். இப்போதும் பேசுகிறேன்.
அவர் கோயில் கருவறை உள்ளே போக முயற்சி செய்யல. அவருக்கு மரியாதை பண்ணனும் சொன்னாங்க . அந்த இடத்தில் நிற்க சொன்னாங்க பின்னர், அவருக்கான மரியாதையை செஞ்சாங்க அவ்ளோதான்.” என நடிகை கஸ்தூரி பேசினார்.