பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!
சமூக வலைதளம் வாயிலாக பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல பெண்களை சமூக வலைதளம் வாயிலாக ஏமாற்றிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி கன்னியாகுமரி எஸ்பி பரிந்துரை செய்ததன் பெயரில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.