இனி காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும்-அமித் ஷா நம்பிக்கை

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பணியை விளக்கும் விதமாக லிசனிங், லேர்னிங் & லீடிங் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன்.இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .
அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை. மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன். இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை.தமிழ் மொழியை கற்றுக்கொண்டு நிச்சயம் தமிழில் பேசுவேன் என்று பேசினார்.
இளம் வயதிலிருந்து பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் வெங்கய்யா நாயுடு . காஷ்மீர் மசோதாவை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம்.370 ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன்.அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பதில் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருந்தேன்.இனி காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன் என்று பேசினார்.