காஷ்மீர் தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி!!முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் தாக்குதலுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.அதேபோல்  தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்