பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
பின் தாக்குதலுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார்.அதேபோல் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணடைந்த சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…