காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி.! தமிழக பிரதிநிதிகளை வழியனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.!
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலை ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
தமிழகத்துக்கும் காசிக்குமான கலாச்சார தொடர்பு , பண்டைய வரலாறு, கல்வி, பொருளாதரம் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் இன்று (நவம்பர் 17) முதல் டிசம்பர் 16வரையில் வாரணாசியில், காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க சென்னையில் இருந்து தமிழக பிரதிநிதிகள் அடங்கிய ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் இந்த சிறப்பு ரயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இந்த தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் நாளை மறுநாள் நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழக பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து புறப்பட உள்ளனர்.