துப்பரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த கரூர் வேலாயுதபாளைய தொழிலதிபர்!

துப்பரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த கரூர் வேலாயுதபாளைய தொழிலதிபர் மற்றும் குடும்பத்தினர்!
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் மக்களுக்காக ரோட்டில் சென்று குப்பைகள் அள்ளி நாட்டை சுத்தம் செய்து வரும் துப்புரவு பணியாளர்களை நிச்சயமாக நாம் நேரத்தில் பாராட்டியாக வேண்டும்.
இந்நிலையில், தற்போது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திலுள்ள துப்புரவு பணியாளர்களை பாராட்டி அங்குள்ள தொழிலதிபர் தொகை முருகன் தன் குடும்பத்துடன் பாதபூஜை நடத்தி மரியாதை செலுத்தியுள்ளார்.