வேகமாக சென்றால் ‘இந்த’ புதிய கருவி மூலம் அபராதம்.! அதிரடி காட்டும் கரூர் போலீசார்.!

Default Image

கரூரில் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ‘தானியங்கி வேகமாணி கருவி’ மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கரூர் போக்குவரத்துக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்ல கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது.

அந்த குறிப்பிட்ட வேகத்தை மீறி அதி வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை கண்டறிய புதியதாக “தானியங்கி வேகமானி” எனும் கருவி மூலம் வாகன சோதனையில் கரூர் போக்குவரத்து
போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அந்த தானியங்கி வேகமானி கருவி மூலமாக நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்கிய வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

கரூர் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு அதிவேகமாக செல்லும் ஓட்டுநர்களை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்