தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூரில் அதிகளவு புகார்கள் வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதாவது, C-Vigil என்ற தேர்தல் ஆணையத்தின் செயலிக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 487 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நட்சத்திர வேட்பாளர்கள் நிறைந்துள்ள கோயம்பத்தூரில் 365 புகார்களில், 284 புகார்கள் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் 131 புகார்களில். 101 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 130 புகார்களில் 118 புகார்கள் மீது உண்மைத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் 127 புகார்களில் 47 புகார்கள் உறுதி செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தபால் வாக்கு செலுத்த 80 வயதுக்கு மேற்பட்ட 1,51,830 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் மாற்றுத்திறனாளிகளில் 45,568 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என கூறி, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…