கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த தற்கொலை குறிப்பில், தான் பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தொந்தரவு கொடுத்ததாக எந்த நபரையும் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தில் யாரையும் குறிப்பிடாததால், இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் காவல்துறை கண்காளிப்பாளர் அவர்களிடம் பேசினேன். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…