செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!
கடந்த 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரையில் புழல் சிறையில் அமலாக்கதுறை விசாரணையில் இருக்கிறார்.
15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..!
கடந்த 2023 மே மாதம் முதலே வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது இன்றும் அந்த வீடு இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வீட்டில் செந்தில் பாலஜியின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
இதற்கு இடையில் பல்வேறு முறை ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிஉச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அமலாக்கத்துறையினர் சார்பில் நீதிமன்ற காவலும் தொடர்ந்து விசாரணைக்காக நீட்டிக்கப்பட்டு வருகிறது.