கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறவுள்ள கரூர் – மாவட்ட நிர்வாகம்
கரூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாற உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாற உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 41 பேர் ஏற்கனவே குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 42-வது கொரோனா நோயாளியான தோகைமலையைச் சேர்ந்த 35 வயது பெண்ணும் குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.