கரூர் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு 30 வெண்டிலேட்டர் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆனால், தன்னுடைய கடிதத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் நிதியை பயன்படுத்தவில்லையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.