பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் உயிரிழப்பு

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த 'கருப்பி' எனும் நாட்டு நாய், நேற்று உயிரிழந்தது.

Pariyerum Perumal dog RIP

திருநெல்வேலி : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரமும் பிரபலமானதை போலப் படத்தில் கருப்பி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டிருந்த சிப்பிப் பாறை வகை இனத்தைச் சேர்ந்த நாயும் பிரபலமானது. படத்தில், நடிகர் கதிர் பாசமாக வளர்ந்த அந்த கருப்பி நாய் இறந்த பிறகு ஒப்பாரி பாடலையும் வைத்தது உண்மையில் மக்களைக் கவலையில் ஆழ்த்திக் கண்கலங்க வைத்தது.

திரையில் அந்த நாய் இறந்ததது கட்டப்பட்டதே எந்த அளவுக்கு வேதனையாக இருந்தது என்பதைச் சொல்லியே தெரியவேண்டா. இந்த சூழலில், உண்மையிலே அந்த நாய் தற்போது உயிரிழந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, (அக்டோபர் 31) தீபாவளியன்று நாய் வசிக்கும் இடத்திற்குப் பக்கத்தில் வெடி போட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது வெடிச் சத்தம் அதிகமாக இருந்ததால் சத்தத்தை கேட்டு பயந்த கருப்பி வேகமாகச் சாலைக்கு ஓடிச் சென்றுள்ளது. அந்த சமயம் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அங்கு வேகமாக வந்த நிலையில், அதில் மோதி கருப்பி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து நாயை ஆசையாக வளரத்துவந்த உரிமையாளர் விஜயமுத்து நாயின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார். இதனையடுத்து, பலரும் நாயின் இறப்புக்கு தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi