மாணவிகளை பாலியலில் ஈடுபட வைத்த வழக்கில் கருப்பசாமி , முருகன் விரைவில் விடுதலை….!!
கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி பாலியல் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடையவர்கள் என்று கூறி முருகன் மற்றும் கருப்பசாமி_யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கருப்பசாமி_யும் , முருகனும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது .இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்திருக்கிறார்கள் அதன் பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து எந்த விதத்திலும் சம்பந்தப்படாத தங்களுக்கு பயம் இல்லை என்று முருகனின் மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.