#யூ டியூப் செனல் தடையா??- கருப்பர் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!

Published by
kavitha

கருப்பர் கூட்டம் என்ற,யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறையில் பல்வேறு அமைப்புகளால்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது குறித்து அளித்துள்ள புகார்:

நாத்திக கருத்துகளை பரப்புவது போன்று சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில் ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து இது போன்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

19ம் நுாற்றாண்டில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை போற்றி, கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டு உள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, இவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது,மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

என்வே அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்தும் குறிக்கோளாகவே உள்ளது. மேலும் மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம்  மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. ‘

இதே போல் ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் செந்தில் புகார் அளித்துள்ளார்: அவரும் கருப்பர் கூட்டம், யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி பிரசாரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து முன்னணியும் தெரிவித்துள்ளது.

இதே போல ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்  இது அறிக்கை வெளியிட்டுள்ளார் :

கடவுள் மறுப்பு என்கிற பெயரில், ஹிந்து மத நம்பிக்கைகளை, தொடர்ந்து  இழிவுபடுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், ‘கறுப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப்’ பதிவு ஒன்றில், ஒருவர், முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் இழிவுபடுத்தியது  மட்டுமின்றி ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துகளை பரப்பி உள்ளார். இதை, ஹிந்து முன்னணி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீதும், அதற்கு பின்னணியில் இயங்கும் நபரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்று அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த கருப்பர் கூட்டம் மீது பல்வேறு வழக்குகள் பிற மாவட்டங்களிலும் பதியப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் #வெற்றிவேல்_வீரவேல் என்ற ஹேஸ்டெக் இந்திய அளவில் ட்ரண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!  

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

16 minutes ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

11 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

11 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

12 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

12 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

13 hours ago