கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டனர்.
இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதன் பின் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில்,சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில்வாசனை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ,கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது .மேலும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக விமர்சித்த கோபால் என்பவன் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…