கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டனர்.
இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதன் பின் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில்,சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில்வாசனை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ,கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது .மேலும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக விமர்சித்த கோபால் என்பவன் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025