#கந்தசஷ்டி- சர்ச்சை பேச்சு -நடிகர்கள் கண்டனம்

Published by
kavitha

‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனலில்’ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை மிகவும் கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும் இதனைப் போன்ற அருவருக்கதக்க கருத்துகளை பரப்பி வருவதாக தமிழகத்தில் முருக பெருமானை கடவுளாக வழிபடுகின்ற மக்கள் மட்டுமின்றி ஹிந்து முன்னனி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 19ம் நுாற்றாண்டில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை போற்றி, கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டு உள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, இவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது,மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று என்வே அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்தும் குறிக்கோளாகவே உள்ளது.

மேலும் மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம்  மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவும்,ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர்,இதே போல ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்  ஆகியோர் புகார் அளித்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இந்த சேனல் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்  கந்தசஷ்டி கவசம் பற்றிய அவதுாறுக்கு நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

அதில் நடிகர் ‘நட்டி’ நட்ராஜ் தனது ‘டுவிட்டரில்’ : போங்கடா முட்டாள்களா… முருகனை பற்றி சொல்ல சிவனாலேயே முடியாது. என் ஜபம் கந்தசஷ்டி கவசம் என்னை காக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

அதே போல நடிகர் பிரசன்னா : யாரும் யாருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது பெரிதாக பேசப்படுகின்ற மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன்? கேட்பதில்லை என்ற வாதமும் பயன் தராது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது.அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராகினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மத நம்பிக்கையினும் அதி முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago