கறுப்பர் கூட்டம் பதிவேற்றிய 500 வீடியோக்கள் நீக்கம்
கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான், இந்த விவகாரத்தில் நேற்று சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் நிர்வாகத்திற்கு “கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலை முடக்கவேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீஸ் ஏற்கனவே கடிதம் எழுதிய நிலையில் , தற்போது அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…