கருணாஸ் பேசியது பற்றி தெரியவில்லை..!சாதி பற்றி பேசியிருந்தால் தவறு..!கமல்ஹாசன்
கருணாஸ் பேசியது பற்றி தெரியவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தல் வரும்போது போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி பேசலாம் ஆனால் கருணாஸ் பேசியது பற்றி தெரியவில்லை. சாதி பற்றி பேசியிருந்தால் தவறு தான் என்று கூறியுள்ளார்.சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது, சாதி பற்றி பேசும் நேரம் இதுவல்ல.அதேபோல் கருணாஸ் மன்னிப்பு கோரியதையும் ஏற்க வேண்டும்.
மேலும் தொழில்துறை வெளி மாநிலங்களுக்கு செல்ல மத்திய, மாநில அரசுகளே காரணம். முடிந்த பின்பு ஆறுதல் தெரிவிப்பதை விட இழப்பு ஏற்படும் முன்பே அதற்கான தீர்வை காண வேண்டும். ஆனால் அரசுகள் தவறிவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.