#ELECTIONBREAKING : அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவிற்கு ஆதரவு..!
சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்தார்.
2 நாட்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி உறுதியானால் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு இடம் ஒடுக்குவதற்கு திமுக முன்வரும் எனவும், உதயசூரியன் சின்னத்தில் அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.