கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 16 ஆம் தேதி ) முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது. எனவே நான் முதல்வரையே அடிப்பேன்னு முதல்வருக்கு தெரியும்.முதல்வருக்கு நான் அடிப்பேன்னு பயம் இப்பவும் இருக்கும் வேணும் என்றால் போன் செய்து கேட்டுப் பாருங்கள் என்றார் காட்டமாக.
தொடர்ந்து பேசிய கருணாஸ் , சென்னை தியாகராயர்நகர் சரக துணை காவல் ஆணையர் அரவிந்தனை கண்டிக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் காவல்துறை ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்.காவல்துறை முடிந்தால் என்னிடம் மோதி பார்க்கட்டும்.கக்கி சட்டையை கழத்தி வைத்து விட்டு என்னிடம்போலீஸ் மோதிபார்க்கட்டும் என்றார்.அது மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் பின்னாடி 10 பேர் சேர்ந்து வந்த போலீஸ்க்கு என்ன ஜமீந்தாருனு நினைப்பா இல்ல குறுநில மன்னன்னு நினைப்பா போலீஸ் அதிகாரிகளுக்கு என்று காவல்துறையை விளாசினார்.
தொடர்ந்து போலீசை கண்டித்த அவர் , போலீஸ் திமிர் பிடித்து அலைகிறார்கள் அதனால் தான் ஒருவரை பிடித்தல் அவனுடைய கைய ஒடி , காலை ஓடி என்று ரவுடி தனமாக பேசுகிறார்கள்.போலிஸ் இப்படி கைய , காலை ஓடிப்பேன்னு முக்குலத்தோர் புலிப்படையிடம் வைத்தால் அந்த போலீஸ் காலை ஓடைக்கணும் என்றார்.நான் நினைத்தால் சம்மந்த பட்ட போலீஸ் அந்த பதவில இருக்க முடியாது அன்னைக்கே அந்த போலீஸ் டிரஸ்ஷை காளத்தி இருப்பேன் இது போலீஸ் துறையின் தலைவர் ராஜேந்திரன் அவருக்கு தெரியும் என்று காவல்துறையை சாடினார்.
இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அவதூறாக பேசுதல்,தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்தது . மேலும் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் . சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…