கருணாஸ் என்னோட ஆள் ..!எனக்கு ஆதரவாக பேசியதால்தான் கைது ..!பழிவாங்கும் அதிமுக அரசு …!டி.டி.வி.தினகரன் அதிரடி
எனக்கு ஆதரவாக பேசிய காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.ஆவர் கூறுகையில், சட்டமன்றத்தில் எனக்கு ஆதரவாக பேசிய காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் அமமுக வளர்ச்சியை நீங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறீர்கள். 90சதவீத தொண்டர்கள் எங்களோடுதான் உள்ளார்கள் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.