” என் ஆதரவு அதிமுக_விற்க்கே ” கருணாஸ் M.L.A உறுதி….!!
தமிழக பட்ஜெட்_டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்றைய சட்டசபை கூட்டத்தில் அப்துல்கலாம் பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி அமைக்க முடிவு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் மணிகண்டன் கல்லூரி அமைவது கருணாஸ் தொகுதியில் அல்ல என்னுடைய தொகுதி ராமேஸ்வரத்தில் என்று கூறினார்.அப்போது M.L.A கருணாஸ் என்னுடைய தொகுதிக்கு அரசு ஏதும் செய்ய வில்லை என்று ஒத்துக்கொண்டது நன்றி என்று கூறினார்.
மேலும் M.L.A கருணாஸ் கூறுகையில் , இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவேண்டும் . நான் இனி தேர்தலில் போட்டியிடுவேனோ இல்லையோ என்று தெரியவில்லை ஆனால் என்னுடைய ஆதரவு அதிமுக அரசுக்குத்தான் என்று தெரிவித்தார்.