அவதூறு பேச்சு .!மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை .!

Published by
Venu

வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.

செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் மீண்டும்  காவல்துறை தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.அதன்பின்  ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜரானார்.

பின் சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்.மனுவை தள்ளுபடி செய்தது.

அதேபோல் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த 2 வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீதும் கைது செய்யப்பட்டார்.

Image result for karunas

 

ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கியது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த தாக்குதல் தொடர்பாக கருணாஸ் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.ஐபிஎல் போராட்டம் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் மீண்டும் ஆஜரானர்.

ஆஜரான பிறகு ஐபிஎல் போட்டியின்போது தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு அக்டோபர் 4 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டது.அதேபோல் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியதாக கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிய போதிய முகாந்திரம் இல்லை.இந்த புகாரில் கருணாசை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

பின்  ஐபிஎல் போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மனு தாக்கல் செய்தார்.

நேற்று   கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்..

இந்நிலையில் வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஊர்வலம் நடத்தியது என 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago