முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்திவிட்டார் ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் கருணாஸ் கொதிப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் திருநீறு பூச மறுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் 1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில் அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதை செலுத்தியதை அவமதிப்பது நாகரிகமாக இருக்காது என பெரியார் கூறினார். திராவிடர் கழகத்தின் வழியில் வந்த அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் இல்லை ஆத்திகராக இருக்க வேண்டும்.
தேர்தல் நேரங்களில் எடுக்கக்கூடிய ஆரத்தி மற்றும் வைக்கக்கூடிய திருநீறுகளையும், இஸ்லாமியர்கள் அணிவிக்கும் புனிதமான குல்லாவையும் அவர் ஏற்றுக்கொள்ளும் போது திருநீறை உதாசீனப்படுத்தி பசும்பொன்முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்திவிட்டார்.
இதற்கு உடனடியாக மு.க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சடங்கு உள்ளதை ஏற்றுக் கொள்பவராகவும், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்பவராக மு.க ஸ்டாலின் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.