கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன்பின் அக்டோபர் 3 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை கைது செய்ய கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனால் நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டனர்.
இதன் பின் நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் கருணாஸ் முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றக் கிளை கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை,சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை, போலீஸ் கைது செய்யாது .அதேபோல் கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைத்தது. கைது செய்ய போலீஸ் காத்திருப்பதாக கருணாஸ் தரப்பு முறையிட்டது .இதனால் கருணாஸை போலீஸ் 3 நாட்கள் வரை கைது செய்யாது என நீதிபதி உறுதி அளித்தார்.இந்நிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது கருணாஸ் மனு .
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…