கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன்பின் அக்டோபர் 3 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை கைது செய்ய கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனால் நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டனர்.
இதன் பின் நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் கருணாஸ் முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றக் கிளை கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை,சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை, போலீஸ் கைது செய்யாது .அதேபோல் கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைத்தது. கைது செய்ய போலீஸ் காத்திருப்பதாக கருணாஸ் தரப்பு முறையிட்டது .இதனால் கருணாஸை போலீஸ் 3 நாட்கள் வரை கைது செய்யாது என நீதிபதி உறுதி அளித்தார்.இந்நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது கருணாஸ் மனு .
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…