ஐபிஎல் தாக்குதல் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது.காவல்துறை தாக்கல் செய்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்று ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜரானார்.
பின் சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்.
அதேபோல் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த 2 வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீதும் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வேலூர் சிறையில் உள்ளார்.
நேற்று ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கியது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த தாக்குதல் தொடர்பாக கருணாஸ் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஐபிஎல் தாக்குதல் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…