கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு ..!எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ..!

Default Image

ஐபிஎல் தாக்குதல் தொடர்பாக  எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.

செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது.காவல்துறை தாக்கல் செய்த மனுவும் நேற்று  விசாரணைக்கு வந்தது.

நேற்று  ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜரானார்.

பின்  சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்.

Image result for கருணாஸ்

அதேபோல்  சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த 2 வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீதும் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வேலூர் சிறையில் உள்ளார்.

நேற்று  ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கியது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த தாக்குதல் தொடர்பாக கருணாஸ் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஐபிஎல் தாக்குதல் தொடர்பாக  எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi